'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் ரிலீசுக்கு முந்தைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும் அளவுக்கு இந்த படத்தின் பிரச்சனை உச்சகட்டமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அனைத்து பிரச்சனைகளை சமாளித்து திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு அடாது மழையிலும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து வருவதால் வசூல் மழையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ’மாநாடு’ திரைப்படத்தின் வசூல் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சுரேஷ் காமாட்சி சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் ரூபாய் 14 கோடி என்று அறிவித்துள்ளார்.

இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் வசூல் பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

2 மரங்களை 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அம்பானி… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்தியத் தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்துவரும் முகேஷ் அம்பானி 180

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் அடுத்த சூப்பர்ஹிட் படம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

வொர்க் அவுட்டிற்கு இடையே நடனம்… மாஸான வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

தமிழ், மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை பாவனா.

எனது நடிப்பிற்கு மிகப்பெரிய விருது கிடைத்துவிட்டது: எஸ்.ஜே.சூர்யா டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்

லைகா-யோகிபாபு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை, 11:11 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது!