close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிப்பு!

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இன்று அவர் நடித்து வரும் இன்னொரு படமான ’மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார்

அந்த வகையில் சற்று முன்னர் ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த அறிவிப்பில் ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பதும் இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கும் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் அந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது

இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 21ஆம் தேதி வெளிவர இருப்பதை அறிந்த சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று, இது குறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.