close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சுப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் தினமான மே 14ம் தேதி ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சிம்பு மற்றும் யுவனின் ரசிகர்களால் மாபெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.