அட்டகாசமான 'மாநாடு' பர்ஸ்ட்லுக்: சிம்பு ரசிகர்களுக்கு தரமான சம்பவம்

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளிவந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவின் சமூக வலைத்தள பக்கத்தில் அட்டகாசமான ‘மாநாடு’ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்து வரும் சிம்பு, இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையிலும் தொழுகை செய்வது போல் இருக்கும் இந்த மாஸ் போஸ்டர் உண்மையில் சிம்புவின் ரசிகர்களுக்கு தரமான சம்பவமாகவே கருதப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த ஃபர்ஸ்ட்லுக் புரமோ போஸ்டரில் இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் இருந்தது என்பது தெரிந்ததே.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். யுவன்ஷங்கரின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
 

More News

சூரியனுக்கு தொடர்ந்து 60 நாட்கள் லீவா? ஒரு நகரம் மட்டும் இருளில் மூழ்கும் அபாயம்!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் மட்டும் தொடர்ந்து 60 நாட்களுக்கு சூரிய உதயமே இருக்காது என்ற தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் காசியிடம் சிக்கிய நடிகைகள், விஐபி மனைவிகள் யார் யார்? அதிர்ச்சித் தகவல் 

தமிழகத்தையே உலுக்கிய நாகர்கோவில் காசி விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது என்பது தெரிந்ததே. பள்ளிக்குழந்தைகள் முதல் விஐபிக்களின் மனைவிகள் வரை சுமார் 80 பெண்கள்

நானும் மாலத்தீவுக்கு போகப்போறேன்: வைரலாகும் குஷ்புவின் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள நிலையில் நானும் விரைவில் மாலத்தீவு செல்ல போகிறேன் என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

ஆன்லைன் ரம்மிக்கு தடை: தமிழக அரசு அதிரடி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளியாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு ஒரு சிலர் தற்கொலை செய்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை அடுத்து

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவது இவரா? பரபரப்பு தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி