close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள் 

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள அரசியல் ஆக்சன் படமான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதை அடுத்து இன்று காலை இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

இந்த பூஜையில் இயக்குனர் பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜைக்கு பிறகு ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இதனையடுத்து முழுநேர படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

சிம்பு நடிப்பில் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்க இருந்த நிலையில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளி இன்றி நடைபெறும் என்றும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

’மாநாடு’ படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ், டேனியல் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz