சிம்புவின் 'மாநாடு' படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை தி.நகர் காபி ஷாப்பில் 2 நாள் நடந்து முடிந்தது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கவுள்ளது.

ஐதராபாத்தில் சுமார் ஒரு மாதம் பிரமாண்டமான செட்டில் படமாக்கப்பட்ட பின்னர் அதனை தொடர்ந்து தேனியில் பிரமாண்டமான மாநாடு காட்சிகள் படமாகிறது. இதில் இந்த படத்தில் நடிக்கும் சிம்பு உள்பட அனைத்து நடிகர்களும் பங்கேற்கின்றனர்.

ஐதராபாத், தேனியை தொடர்ந்து அடுத்தகட்டமாக இலங்கையில் மாநாடு படத்தின் அடுத்டகட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் அதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடப்பதுடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு பேசும் அரசியல் வசனங்கள் தயாராகி விட்டதாகவும் இந்த வசனங்கள் அனைத்தும் சரவெடிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

More News

ஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் – அடித்தது லாட்டரி!!!

உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

'தலைவர் 168' படத்துடன் கனெக்சன் ஆனது 'சூரரை போற்று'

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி

கூகுளில் எதைத் தேடினாலும் முதலில் வந்து நிற்பது விக்கிபீடியா தரவுகள் தான். அந்த அளவிற்கு தற்போது விக்கிபீடியா  தரவுகளின் ராஜாவாக உலகம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது.

தூத்துகுடி விவகாரம்: ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரஜினிகாந்த் கூறியதாக கூறப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும்