close
Choose your channels

சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு எப்போது?

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படமான கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19ஆம் தேதிக்கு பின் தொடங்க இருப்பதாகவும் அதன் பின் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்தார் என்பதை பார்த்தோம். ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு தாமரை அனைத்து பாடல்களையும் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க ’விண்ணை தாண்டி வருவாயா’ போன்ற ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் சிம்பு ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.