சிம்பு ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

More News

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் செல்வராகவன்.. என்ன கேரக்டர்?

ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' மற்றும் 'ரன் பேபி ரன்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு

கைவிட்டு போன அஜித் பட வாய்ப்பு.. 'நானும் ரெளடி தான்' பாடலை பதிவு செய்த விக்னேஷ் சிவன்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் இதனை அடுத்து 'ஏகே 62' திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார்

அம்பிகா, ராதா தெரியும்.. இவர்களின் சகோதரியை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் சகோதரிகள் நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய இருவருமே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்தது.

'PS 2' இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலம்.. நேரில் அழைப்பு விடுத்த மணிரத்னம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

மீண்டும் தனுஷ் - மாரி செல்வராஜ் இணைகிறார்களா?

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.