close
Choose your channels

'துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன? சிம்புவின் 'பத்து தல' டிரைலர்..!

Sunday, March 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவான 'பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில் சிம்புவின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் ட்ரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் சிம்புவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கௌதம் கார்த்திக் ஆவேசமாக காட்சிகள், கௌதம் மேனனின் ஆக்ரோஷமான வில்லத்தன காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன

மொத்தத்தில் இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஆக்சன் ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்களின் அற்புதமான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான டிரைலரில் உள்ள சில வசனங்கள் இதோ:

’இங்க எவன் ஆளனும் எவன் வாழனும்னு நான் தான்டா முடிவு செய்வேன்’

’நீங்க கவர்மெண்ட்க்கு வேலை செய்யறீங்களா அல்லது அந்த ஏஜிஆருக்கு வேலை செய்றீங்களா’

’மான்-ஐ ஓநாய் கொல்லும், ஓநாய்'யை சிறுத்தை கொல்லும், சிறுத்தைய புலி கொல்லும், புலி'யை சிங்கம் கொல்லும் .. ஆனால் அந்த சிங்கத்தை கொல்லுறதுக்கு இன்னொரு மிருகம் பொறந்து வரல டா மயிராண்டி ..

'துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.