சிம்புவின் அடுத்த' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

நடிகர் சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இசையில் அதிக விருப்பமுள்ள சிம்பு, அவ்வப்போது தனிப்பாடல்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் சிம்பு பாடி நடித்த தனிப்பாடல் 'பெரியார் குத்து' என்ற பாடல் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த நிலையில் இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் பெருமைகளை கூறும் இந்த பாடலை மதன்கார்க்கி எழுத ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.