பீச்சில் திரையிடப்பட்ட சிம்புவின் சூப்பர் ஹிட் படம்.. ரசிகர்கள் உற்சாகம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


புதுச்சேரி கடற்கரையில் சிம்பு நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அதை கண்டு களித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸான போது மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி, அதன் பின்னரும் ரீரிலீசில் வசூலில் சாதனை செய்தது. மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் 1000 நாட்களை கடந்து திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள ராக் கடற்கரையில் நேற்று இந்த திரைப்படம் எல்.இ.டி. திரையின் மூலம் திரையிடப்பட்டது. இந்த படத்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால், இதே போல் வேறு சில கடற்கரைகளிலும் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
❤️ Finally #VinnaithaandiVaruvaaya Screening On Pondicherry RockBeach 🔥@SilambarasanTR_ 🫶🏻#VTV_screening_At_Pondy #SilambarasanTR #Atman pic.twitter.com/EFdGKIFazZ
— Hema Kumar STR (@Hemakumar_STR) March 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments