close
Choose your channels

ஜப்பானில் ரிலீஸாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Tuesday, April 8, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த சூப்பர் ஹிட் படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரூ.117 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால், அது "மாநாடு" திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு மற்றும் எஸ். ஜே. சூர்யா போட்டி போட்டு அட்டகாசமாக நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், லூப் ஹோல் கதை அம்சம் கொண்ட படம் என்பதால், தமிழ் ரசிகர்களுக்கு இது புதிதாக இருந்தது. அதனால், இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ‘மாநாடு’ படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, "நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். ‘மாநாடு’ தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாகவுள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது, அங்கும் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜப்பானில் இந்த படம் வெளியாக இருப்பது, சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் "மகாராஜா" திரைப்படம் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது போல, சிம்புவின் "மாநாடு" திரைப்படமும் ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment