close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': தமிழகத்தில் அதிகாலை காட்சி மட்டும் இத்தனையா?

Thursday, September 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் அதிகாலை 4.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் 200 திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 800 திரையரங்குகளில் இந்த படம் 500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்றும், எதிர்பார்த்தது போலவே சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த படம் அமைந்துள்ளதால் இந்த படம் நிச்சயம் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.