close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: எப்போது ரிலீஸ்?

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

மேலும் நேற்று முன்தினம் முதல் நாளில் இந்த படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்களில் என்பதாலும் அதிக திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு உள்ளதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து உள்ளதால் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகையை அமேசான் நிறுவனம் கொடுத்து ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இந்த படம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.