close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? திரையுலகம் ஆச்சரியம்!

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான இந்தப் படம் அதிகாலை காட்சியுடன் சேர்த்து 10 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படம் முதல் நாளில் 10.86 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் நேற்று இரண்டாவது நாளில் அதிகாலை காட்சி இல்லாத நிலையில் 8.51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எனவே இரண்டு நாட்களில் இந்த படத்தின் வசூல் சுமார் 20 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மற்றும் நாளை சனி ஞாயிறு ஆகிய தினங்கள் விடுமுறை நாள் என்பது மட்டுமன்றி இந்த படத்திற்கு தற்போது திரையரங்குகளும் அதிகரித்து உள்ளன. மேலும் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இன்றும் நாளையும் பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் நல்ல வசூல் கிடைக்கும் என்றும் மொத்தத்தில் நான்கு நாட்கள் வசூல் சுமார் 40 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.