close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' கிளிம்ப்ஸ் வீடியோ!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து சூப்பர் ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த ஸ்டில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை மதியம் 1.26 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ’முத்துவின் பயணத்தை காணலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்பு இந்த படத்தில் ’முத்து’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிய வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.