சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த ’மஹா’ திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்நிலையில் சிம்பு நடிக்கும் இன்னொரு திரைப்படமான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை சென்னை உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் படங்கள் ஜூலை மற்றும் செப்டம்பர் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

More News

செல்வராகவனா இது? பயங்கர தோற்றத்தில் 'பகாசூரன்' ஃபர்ஸ்ட்லுக்!

 இயக்குநர் செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக 'சாணிக்காகிதம்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில்

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

ரஜினி படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர்: இதுதான் காரணம்!

திரையுலகில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களும் ரஜினியுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்த

பாவாடை தாவணியில் ரோஜா: வைரல் புகைப்படங்கள்!

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

அக்காவுக்கு இணையாக போட்டோஷூட்டில் கலக்கும் தங்கை!

பிரபல நடிகையின் போட்டோஷூட்டிற்கு இணையாக அவரது தங்கையும் போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார் என்பது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களில் இருந்து தெரியவருகிறது.