முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் சிம்பு? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

உலகநாயகன் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ’இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் கமல்ஹாசன் இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ரீதியில் சென்றால் ’விக்ரம்’ போலவே ’கமல்ஹாசன் 234’ படமும் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

காதலி என்பவர் எப்போதும் காதலி தான், ப்ரெண்ட் என சொல்வது போங்காட்டம்: 'தீராக்காதல்' டிரைலர்..!

ஜெய் நடிப்பில் உருவான 'தீராக்காதல்' என்ற திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 

வேறலெவலா மாறப்போகும் டிவிட்டர் கணக்கு? கட்டணம் இருக்குமா?

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதன் சேவையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன.

3 DNA களுடன் பிறந்த அதிசய குழந்தை… இதுவும் சாத்தியமா?

பிறக்கும் குழந்தைகள் பொதுவாக தாய், தந்தை இருவரின் மரபணுவைக் கொண்டு பிறக்கும். ஆனால் 3 மரபணுக்களைக் கொண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்- பெள்ளியை சந்தித்த தோனி… என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் வி

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’: ஒரே நேரத்தில் வெளியான இரண்டு சூப்பர் அப்டேட்..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது