close
Choose your channels

சிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் விரைவில் சிம்புவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அவருக்கான சரியான பெண்ணை தாங்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது தாயார் உஷா பார்த்த பெண்ணை சிம்பு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்புவுக்கு பார்த்துள்ள பெண் உஷாவின் உறவுக்கார பெண் என்றும், சிம்புவுக்கும் அந்த பெண்ணுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் சிம்புவின் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சிம்பு விரைவில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.