நீளமான குடுமியுடன் மாஸ் லுக்.. வேற லெவலில் சிம்புவின் 'STR48' லுக்..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் ’STR48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் வேற லெவல் கெட்டப்பில் தயாராகி வருவதாகவும் இதற்காக அவர் அமெரிக்காவில் சென்று பயிற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு நீளமான குடுமி வைத்து மாஸ் லுக்கில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் அவரது சட்டையில் சீறும் புலி இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’STR48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு நடந்து வருவதாக கூறப்பட்டது. தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகர் யோகிபாபுவுக்கு விபூதி பூசி ஆசி செய்த முதலமைச்சர்..

நடிகர் யோகிபாபு சமீபத்தில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்தபோது முதலமைச்சர் ரங்கசாமி அவருக்கு விபூதி பூசி ஆசி தெரிவித்தார்.

'தளபதி 68 படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா? வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!

கடந்த சில ஆண்டுகளாக பிரபல பாலிவுட் நடிகர்கள் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் அமீர்கான் தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா எங்கே? அக்கறையுடன் விசாரித்த முன்னாள் மாமனார் நாகார்ஜுனா..!

'குஷி' படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா எங்கே? என அக்கறையுடன் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா விசாரித்துள்ளார்

24 வயது இளம் காதலியுடன் மொட்டை மாடியில் செம்ம ஆட்டம் போட்ட 54 வயது நடிகர்.. வீடியோ வைரல்..!

54 வயதான நடிகர் பப்லு தனது 24 வயது காதலியுடன் மொட்டை மாடியில் செம ஆட்டம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

முழுசா விஜய் ரசிகையாக மாறிய அதிதி ஷங்கர் .. 'நா ரெடி' பாடலுக்கு செம்ம ஆட்டம்..!

நடிகை அதிதி ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுக்கு காரில் உட்கார்ந்து கொண்டு செம ஆட்டம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்