close
Choose your channels

21 கிலோ எடைக்குறைப்பு: மாநாட்டிற்காக தயாரான சிம்பு!

Monday, September 21, 2020 • தமிழ் Comments

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நடத்த மத்திய மாநில அரசுகள் மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ’மாநாடு’ படத்துக்கு உடலளவில் தயாராவதற்கு வெளிநாட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவர் 100 கிலோவிலிருந்து 79 கிலோ வரை உடல் எடையை குறைத்து விட்டதாகவும் 21 கிலோ உடல் எடை குறைந்து அட்டகாசமாக தற்போது அவர் காட்சி அளிப்பதாகவும் அவருடைய புதிய தோற்றத்தைப் பார்த்து படக்குழுவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆச்சரியப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

’மாநாடு’ படத்தை முடித்துவிட்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு கன்னட ரீ-மேக் படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் மேலும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz