நீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

சிம்பு நடித்துவரும் ’ஈஸ்வரன்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்புவின் வெறித்தனமான ரசிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். அவர் அந்த பதிவில் கூறியதாவது:

எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று உருக்கமான பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக என்று கூறி அவர் கூறியதில், ‘நீங்கள் மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. உங்கள் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் தருகீறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

ரசிகையின் இந்த கடிதத்தை பார்த்து சிம்பு கண்கலங்கியதாக சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் தெரிவித்துள்ளார்.

More News

நயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி? வைரலாகும் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும்

நீ யார் கேட்குறதுக்கு? முதல்முதலாக பொங்கிய சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

ஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி!

'Road to Thumba' என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளதாகவும் இந்த குறĬ

சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர்