close
Choose your channels

தமிழ் நடிகர்களில் யாரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை சிம்பு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’மாநாடு’ படத்திற்காக தாடி மீசையுடன் இருந்த சிம்பு, கிளீன் ஷேவ் தோற்றத்தில் ஸ்மார்ட்டாக அந்த வீடியோவில் இருந்தார் என்பதும், அவர் சமையல் செய்யும் இந்த வீடியோவுக்கு சிம்புவின் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் இந்த வீடியோ வெளியாகி ஒரே வாரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரை இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ ஒன்று ஒரு வாரத்திற்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது இது தான் முதல் முறை என்பதால் சிம்புவின் ரசிகர்கள் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் இணைந்த சிம்புவுக்கு 1.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், தனுஷூக்கு 2.8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.