close
Choose your channels

சிம்புவுடன் ஜோடி சேரும் 'பாக்சிங்' வீராங்கனை?

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமின்றி கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இதனை அடுத்து அவர் ’பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ’ஓ மை கடவுளே’ என்ற படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆனார் என்றும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக ’இறுதிச்சுற்று’ படத்தில் 'பாக்சிங்’ வீராங்கனையாக நடித்த நிஜ 'பாக்சிங்’ வீராங்கனை ரித்திக சிங் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ’ஓ மை கடவுளே’ படத்தின் நாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சிம்புவுடன் இணைய உள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.