சிம்புவின் அடுத்த படத்திற்கு 'தல' டைட்டில்!

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த டைட்டிலை 10 இயக்குனர்களை இணைந்து அறிவிக்க உள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபல இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குனர்கள் இந்த படத்தின் டைட்டிலை சற்று முன் அறிவித்துள்ளனர்.

சிம்புவின் அடுத்த படத்திற்கு ’பத்து தல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் சூர்யாவின் ’சில்லுனு ஒரு காற்று’ உள்பட ஒருசில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இவர் தயாரிக்கும் 20 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 

More News

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய திரைப்படம்: காரணம் இதுதான்!

கிறிஸ்துமஸ் தினமான நாளை மாஸ் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஒருசில சின்னபட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

ரியோவை ஜீரோவாக்கிய ரம்யா, கேபியை டார்கெட் செய்த பாலா: இறுதிக்கட்டத்தில் பந்து டாஸ்க்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பந்து டாஸ்கில் நேற்று பிக் பாஸ் இதுவரை விளையாடிய வரையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங்கை தேர்வு செய்யுமாறு தெரிவித்து இருந்தார்.

மூழ்காத ஷிப்பா ஃப்ரெண்ட்ஷிப்: வெளியே போயும் தொடரும் அன்பு குரூப்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ரியோ, நிஷா, சோம், கேபி, ரமேஷ் ஆகிய 6 பேர் அன்பு குரூப்பாக இருந்து விளையாடினர் என்றும் அவர்கள் 6 பேரும் இணைந்து தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை

விவசாயியாக இருப்பதால் பெருமிதம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்!!!

விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை' 'மயக்கம் என்ன''ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே