இதை யாராவது நிரூபித்தால் சினிமாவை விட்டு விலக தயார்! சிம்பு சவால்

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

சிம்பு மீதான பொதுவான குற்றச்சாட்டு அவர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார் என்பது தான். இந்த குற்றச்சாட்டை அவரை வைத்து படமெடுத்த கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சிம்பு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 'என்னை நம்பி படமெடுக்கும் இயக்குனர்கள் என்னிடம் இருந்து எந்தவிதமான நடிப்பை எதிர்பார்க்கின்றார்களோ அந்த நடிப்பை வெளிப்படுத்தும் மனநிலைக்கு நான் வந்தபின்னர்தான் படப்பிடிப்புக்கு வருவேன். அதுவரை நான் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதற்காக என்னை யார் திட்டினாலும் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன்' என்று கூறினார்.
அதே நேரத்தில் சிம்பு நடிக்க வந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு 20 டேக் எடுத்தார், 25 டேக் எடுத்தார், அதனால் தான் படப்பிடிப்பு தாமதமானது என்று எந்த இயக்குனராவது கூறினால் நான் சினிமாவை விட்டு விலகத்தயார்' என்று சவால் விடுத்துள்ளார்.
சிம்பு, படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தாலும் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் முடித்துவிடுவார் என்று கவுதம் மேனன் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோடி மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரிகள்

பாரத பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார்.

ரம்ஜான் ரிலீஸ் திரைப்படங்களின் 4 நாள் வசூல் நிலவரம்

கடந்த வெள்ளியன்று சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜெயம் ரவியின் 'வனமகன்' மற்றும் அல்லு அர்ஜூன் நடித்த DJ என்று கூறப்படும் 'துவாடா ஜெகந்நதம்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின...

கஸ்தூரிக்கு பிடித்த சூப்பர் ஹீரோ! ஒருவர் செல்லூர் ராஜூ, இன்னொருவர்?

முன்னாள் நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களையும் பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்

அஜித்தின் 'விவேகம்' படக்குழு சென்னை திரும்பும் தேதி!

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒருசில விடுபட்ட காட்சிகளில் படப்பிடிப்பிற்காக மீண்டும் அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் கடந்த வாரம் செர்பியா சென்றனர் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்தியாவின் முதல் ரூ.2000 கோடி வசூல் படம் இதுதான்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் மாபெரும் வசூலை குவித்த இந்திய திரைப்படங்கள் என்ற பெருமையை பெற்ற நிலையில் அவருடைய இன்னொரு படமான 'தங்கல்' திரைப்படம் உலக அளவில் ரூ.2000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது...