அல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டி போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்? 

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் பிற மொழிகளிலும், பிற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. 

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’Ala Vaikunthapurramuloo’என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பினர் போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு நடிப்பில் ’வாலு’ திரைப்படத்தையும், விக்ரம் நடிப்பில் ’ஸ்கெட்ச்’ திரைப்படத்தையும் இயக்கிய இயக்குனர் விஜய்சந்தர் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கேரக்டரில் சிம்புவை நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதேபோல் அல்லு அர்ஜுன் நடித்த இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சிவகார்த்திகேயன் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் யார் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்!!!

கொரோனா ஊரடங்கில் சினிமாத்துறை கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

ஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஒருசில உயிர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருந்து வருகிறது என்பதும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தில் இருப்பதால்

கொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ்  மருத்துவர்கள், பணியாளர்கள்!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்