ஐஸ்கிரீமுக்குள் மோதிரம் வைத்து காதல் புரபோஸ்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐஸ்கிரீமுக்குள் மோதிரம் வைத்து காதலை புரபோஸ் செய்யும் காட்சிகளை கொண்ட டைட்டில் வீடியோவை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'இட்லி கடை' உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் என்பவர், 'இதயம் முரளி' என்ற படத்தை இயக்க இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன் நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அதர்வா மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகிய இருவரும் தங்கள் காதலை புரபோஸ் செய்ய ஐடியா செய்கிறார்கள். அப்போது, "ஐஸ்கிரீம்க்குள் மோதிரத்தை வைத்து புரபோஸ் செய்ய வேண்டும்" என்று அதர்வா ஐடியா கொடுக்கிறார். அந்த ஐடியாவின் படி தமன் புரபோஸ்செய்ய, காதல் உறுதியாகி உடனடியாக திருமணம் வரை செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், காயடு, நட்டி நடராஜ், தமன், நிஹாரிகா, ரக்சன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சாய் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டிற்குள் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loved the teaser of #IdhayamMurali! The visuals and storytelling look refreshing and promising. @AakashBaskaran shines not only as a producer but also as a director! Wishing @Atharvaamurali @MusicThaman and the entire team a great success!
— Silambarasan TR (@SilambarasanTR_) February 14, 2025
Here is the amazing title teaser:… pic.twitter.com/ELLYVBiirt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com