சதீஷின் 'சட்டம் என் கையில்': சிம்பு வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • IndiaGlitz, [Sunday,April 10 2022]

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார் !

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார்.

படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது: பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசன் TR அவர்களை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் P.G. முத்தையா ஒளிப்பதிவில் கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பில் N.K. ராகுல் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தமிழின் முதல் ரோபோடிக் காதல் தொடரில் முகேன்ராவ் - ஹன்சிகா!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் வெப்தொடர் தமிழின் முதல் ரோபோடிக் காதல் தொடராக உருவாகவுள்ளது. இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்திக்குறிப்பில்

இந்திய அளவில் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்!

இந்திய அளவில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது 1,000 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்'

'நானே வருவேன்' படக்குழுவில் இருந்து பிரிந்தார் நாயகி: வைரல் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் குழுவிலிருந்து விடைபெற்று கொள்வதாக நாயகி எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': குவைத்தை அடுத்து மேலும் ஒரு நாட்டில் தடை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின்  முன்பதிவு தொடங்கிவிட்டது என்பதும் முதல் 3 நாட்களுக்கான

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' 10ஆம் பாகத்தில் 'கேப்டன் மார்வெல்' நடிகை: வின்டீசல் அறிவிப்பு

 உலகம் முழுவதும் ஆக்சன் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் தொடர் படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2001ஆம் ஆண்டில் 'பாஸ்ட் அண்ட்