'இப்ப போட்றா பால? சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் ’ஈஸ்வரன்’ என்றும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் ’ஈஸ்வரன்’ படத்தின் பின்னணி இசை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறும் 18 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ ’இப்ப போட்றா பால? என்று சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தமனின் இசையில் உருவான பின்னணி இசை சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து இளைஞர்களையும் எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு செம குத்து பின்னணி இசையாக உள்ளது.

சிம்பு நிதி அகர்வால் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.