நம்மளோட உரிமைகளை நாம தான் கேட்டு வாங்கணும், தேவைப்பட்டா புடுங்கி எடுக்கணும்.. 'ரத்த சாட்சி' டீசர்

  • IndiaGlitz, [Tuesday,November 29 2022]

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான 'ரத்த சாட்சி’ என்ற திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீஸர் தற்போது வைரலாகி வருகிறது.

பரம்பரை பரம்பரையாக அடிமையாக வைத்து வேலை வாங்கி வரும் ஒரு முதலாளியின் கொடுமையை எதிர்த்து பொங்கி எழும் தொழிலாளர்களின் கதைதான் இந்த ‘ரத்த சாட்சி’ என்பது ஒரு நிமிட டீசரில் இருந்து தெரியவருகிறது.

கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ரஃபிக் இஸ்மாயில் என்பவர் இயக்கி உள்ளார். ஜாவித் ரியாஸ் இசையில் உருவான இந்த படம் விரைவில் ஆஹா ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பண்ணை இருந்தான், அவன் 100 பேரை கொத்தடிமையா வச்சிருந்தான்

எங்க தாத்தனும் பாட்டனும் கூலின்னு ஒண்ணை பார்த்ததே இல்லை. எங்க காலத்திலயும் நாங்க ஒரு கூலியும் வாங்குனதே இல்லை

உலகத்தில எந்த சக்தியாலும் நம்மள அடக்கி வைக்க முடியாது. நம்மளோட உரிமைகளை நாம தான் கேட்டு வாங்கணும். தேவைப்பட்டா புடுங்கி எடுக்கணும்.

இருக்குறவன் இல்லாதவன அடிச்சா, அவன் ஆண்டவனா இருந்தாலும் அடிதான்

போன்ற புரட்சிகரமான வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.