close
Choose your channels

சினிமாவின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் படம்.. சிம்பு பாராட்டிய திரைப்படம்..!

Sunday, June 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிம்பு சினிமாவை மறு வரையறை செய்யும் திரைப்படம் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய படம் ’கல்கி 2898’ ஏடி’

இந்த படம் வரும் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்த அந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் பல திரையுலக பிரபலங்களும் இந்த டிரைலரை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் நடிகர் சிம்பு இந்த படத்தின் டிரைலரை பார்த்து, ‘கல்கி 2898 ஏடி’ சினிமாவின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதாகவும் இயக்குனர்களை தைரியமாக கனவு காண தூண்டுவதாகவும் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான கலை படைப்பில் உள்ள ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை காணும் போது மிகுந்த பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அசாத்திய சாதனை திரைப்படத்தை எடுத்த ’கல்கி’ குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் சிம்பு கூறியுள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment