இளம் ஹீரோவுக்காக சிம்பு பாடிய பாடல் நாளை ரிலீஸ்.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகின் இளம் ஹீரோவுக்காக, நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் வீடியோவும் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், 'பார்க்கிங்’ மற்றும் ’லப்பர் பந்து ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து, தற்போது ’நூறு கோடி வானவில்’ மற்றும் ’டீசல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ’டீசல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் ரிலீசாக இருக்க உள்ளது. இதன் புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் முதல் கட்டமாக, இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நாளை, பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கான புரொமோ வீடியோ வெளியாகிய நிலையில், அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பது அதிலிருந்து தெரிய வருகிறது. இந்த பாடல் குறித்து ஹரிஷ் கல்யாண், ’என்னோட காதுக்கு இது பாட்டா இருந்தாலும் என் நெஞ்சுக்கு அன்பு தான் கேட்கிறது" என்று கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’டீசல்’ திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், வினய், சசிகுமார், விவேக் பிரசன்னா, சச்சின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, திபு நினம் தாமஸ் இசையமைத்துள்ளார்.
#STRforDiesel
— Harish Kalyan (@iamharishkalyan) February 16, 2025
Ennoda kaadhuku idhu paata irundhalum, en nenjukku anbu dhan kekkudhu.
@SilambarasanTR_ kuralil #DillubaruAaja from #Diesel
Thanks for doing this. Love you na ❤️🤗
Song releasing on Feb 18th. Check out the promo ⬇️
@AthulyaOfficial @devarajulu29… pic.twitter.com/zxcPdd1rds
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments