என்னால ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் பேச முடியும்: சிசிவி ஆடியோ விழாவில் சிம்பு

  • IndiaGlitz, [Thursday,September 06 2018]

சிம்புவுக்கு ஒரு மேடை கிடைத்துவிட்டால் மணிக்கணக்கில் பேசுவார் என்பது தெரிந்ததே. அவரது பேச்சில் மனம் திறந்த உண்மை இருக்கும் என்பதால் அவரது பேச்சு காரசாரமாக இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட சிம்பு நேற்று நடைபெற்ற 'செக்க சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெகு குறைவாக அமைதியாக பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜோடி ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி - அதிதிராவ், அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பின்னர் சிம்பு-டயானா ஜோடி மேடையேறியது. இந்த விழாவில் சிம்பு பக்கம் பக்கமாக பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சிம்பு பேசியதாவது:

''நான் ஒரு வார்த்தைதான் பேச வந்தேன் 'நன்றி மணி சார்'. நான் காண்டிப்பா பேசுவேன், நான் பேசுவேன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா இப்போ பேசுறதவிட. இயக்குனர் மணிரத்னம் எடுத்துள்ள இந்த படம் பேசும். அதுக்கப்புறம் நான் பேசுறேன் என்று கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டார். சிம்பு அதிகம் பேசவில்லை என்று அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் சிம்பு தற்போது அதிக பக்குவம் அடைந்துவிட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

More News

ரித்விகா கொடுக்கும் டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் ஒருதலைபட்சமாக பாசம் காட்டி வருவது வெட்ட ஏற்கனவே வெளிச்சமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் அஜித்தின் 'தக்ஷா' டீம் சாதனை படைக்குமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் ஆலோசகராக இருந்தார் என்பதும் இந்த டீம் இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது

உதயநிதியின் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் 2 பிரபல ஹீரோயின்கள்

இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படமான 'சைக்கோ' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின்,

'சர்கார்' விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரம்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

ஜிப்ரானுக்கு அமெரிக்க பல்கலை கொடுத்த கெளரவம்

வசந்தபாலன் இயக்கிய 'வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2'