நான் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ இருக்க ஆசைப்படலை.. 'தக்ஃலைப்' விழாவில் சிம்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்ஃலைப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் சிம்பு பேசிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசியவற்றில் சில முக்கிய தகவல்கள் இதோ:
"மன்மதன் 2", "வல்லவன் 2" ஆகிய இரண்டு படங்களில், இன்றைய காலத்தில் மன்மதன் 2 சரியான சாய்ஸாக இருக்கும்.
"விராட் கோலி அல்லது கமல்ஹாசன் இருவரது வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டால், எதில் நீங்கள் நடிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "இரண்டு படங்களிலும் நடிக்க எனக்கு ஆசை தான். சமீபத்தில் கூட விராட் கோலியிடம் 'நீ சிங்கம் தான்' என்ற எனது பாடலை பார்த்து ரசித்ததாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது," என்றும் தெரிவித்தார்.
மேலும், "புதிதாக திரையுலகில் இயக்குனராக வருபவர்களுக்கு நான் மூன்று படங்களை பரிந்துரை செய்வேன். அவை: ஒரு தலை ராகம், நாயகன் மற்றும் இந்தியன்," என்றும் அவர் கூறினார்.
மேலும், "விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை இனிமேல் மீண்டும் ரீ-கிரியேட் செய்ய முடியாது" என்று கூறிய சிம்பு, ‘தக்ஃலைப்’ இது ஒரு வித்தியாசமான படம்," என்றும் தெரிவித்தார்.
‘தக்ஃலைப்’ படத்தின் டிரைலர் தெறிக்க போகுது. இந்த ட்ரெய்லரை பார்த்தாலே உங்களுக்கு என்னுடைய கேரக்டர் ஈஸியாக புரியும். இந்த படத்தில் நான் ஹீரோவா? வில்லனா? என்பதை நீங்கள் ‘தக்ஃலைப்’ படத்தின் ட்ரைலரை பார்த்து கண்டுபிடியுங்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "நான் நல்லவனாக இருக்க ஆசைப்படவில்லை, கெட்டவனாகவும் இருக்க ஆசைப்படவில்லை. நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன்," என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
#ThuglifeTrailer Out Now
— Raaj Kamal Films International (@RKFI) May 17, 2025
➡ https://t.co/Xy1tm87OuO#Thugfluencers#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers… pic.twitter.com/rhp4PAmetE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com