சிம்புவின் 'AAA' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா உள்பட மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ஒருசில செய்திகள் இந்த படத்தில் சிம்புவுக்கு நான்காவது வேடம் ஒன்று இருப்பதாகவும் கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாகவும், மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய வேடங்கள் முதல் பாகத்திலும், மீதியுள்ள வேடங்கள் இரண்டாவது பாகத்திலும் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையெனில் சிம்பு நடிக்கும் முதல் இரண்டு பாகங்கள் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனாகான், மகத், விடிவி கணேஷ், கோவை சரளா, ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்