close
Choose your channels

'மாநாடு' படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் சிம்பு, வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் அனைவரும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

’மாநாடு’ திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக சோனி ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மீண்டும் ரிப்பீட் மோடில் இந்த படத்தை ஓடிடியில் பார்க்க தயார் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.