ஜப்பானில் 'மாநாடு' கொண்டாட்டம்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,November 28 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நிலையில் தற்போது சிம்புவின் ‘மாநாடு’ படத்தையும் ஜப்பானியர்கள் கொண்டாடி வருவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் இரண்டே நாட்களில் 14 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பதும் தற்போது அடாது மழையிலும் திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூலில் சாதனை செய்துவரும் ‘மாநாடு’, ஜப்பானிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜப்பானில் உள்ள ரசிகை ஒருவர் ‘மாநாடு’ படத்தின் போஸ்டர் அருகே நின்று தனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளதாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதை மட்டும் செய்யாதீங்க: 'மாநாடு' படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

'மாநாடு' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்கள் தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாவனியுடனான லவ் பிரச்சனை: அபினவ் மனைவி சொன்னது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்பதும் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்யாகிருஷ்ணன் தொகுப்பாளினியாக மாறி உள்ளார்

'பீஸ்ட்' படத்தின் அட்டகாசமான அப்டேட் தந்த நெல்சன்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

தாமரை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் தாமரை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரியங்கா 'நல்லா பேசுறாங்க மேம்' என்றும் ரம்யா கிருஷ்ணனிடம் பிரியங்கா

சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல நடிகை!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது