டிரான்ஸ்பர்மேஷன் வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,February 05 2022]

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு சமீபத்தில் தனது உடல்எடையை முற்றிலும் குறைத்திருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய உடல்குறைப்பு எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்டு இருக்கிறார்.

நடிகர் சிம்புவின் “மாநாடு“ திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில் அவருடைய உடல்குறைப்பு பற்றிய தகவல்களும் ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. காரணம் உடல்எடை அதிகரித்து காணப்பட்ட சிம்பு “ஈஸ்வரன்“ படத்திலேயே அறிமுக நாயகனைப்போல படு ஒல்லியான தோற்றத்துடன் காணப்பட்டார்.

இந்நிலையில் சிம்புவின் 39 ஆவது பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வலம்வந்த நிலையில் தற்போது தன்னுடைய உடல்எடை குறைப்பு குறித்த வீடியோவை நடிகர் சிம்புவே தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தொடங்குவதற்கு முன்பு உடல்எடை அதிகமாகும் அளவிற்கு விடாதீர்கள். ஒருவேளை உடல்எடை அதிகரித்துவிட்டால் அதுகூடவே சந்தோஷமாக வாழ பழகிக்கொள்ளுங்கள் எனக் கலங்கியபடியே சிம்பு பேசியிருக்கிறார். மேலும் உடல்எடை குறைப்பிற்கு முன்பு 105 கிலோவில் இருந்து சிம்பு இந்த வீடியோ முடியும்போது வெறும் 72.8 கிலோவாக குறைந்து காணப்படுகிறது.


கொரோனா நேரத்தில் உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு வெறுமனே இதற்காக வொர்க் அவுட் மட்டும் செய்யவில்லை. கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ் எனத் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர் பட்டாளம் நடிகர் சிம்புவை கொண்டாடி தீர்த்துவரும் நிலையில் அவரைப்போலவே தற்போது உடல்எடை குறைப்பது குறித்து இணையத்தில் அலசி வருவதையும் பார்க்க முடிகிறது.

More News

மூன்று வெற்றிப்பட இயக்குனர்கள்: விஜய் எடுத்த மாஸ் புகைப்படம்

விஜய் படங்களை இயக்கிய 3 இயக்குனர்கள் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தலைமை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய் வீட்டிற்கே சென்று சந்தித்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஓடிடிக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம்: தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பதே நடைமுறை. ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த நடிகரா?

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடரும் கொலைகள், தீராத மர்மம்,  தூங்கா தேடல்: விமலின் 'விலங்கு' டிரைலர்

விமல் நடித்த வெப் தொடரான 'விலங்கு' வரும் 18 ஆம் தேதி ஜீ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் 'விலங்கு'