close
Choose your channels

அஜித்துடன் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த அனுபவம்.. சிம்ரனின் 'பிளாஸ்ட்' பதிவு..!

Friday, April 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் சில மாஸ் காட்சிகள் இருந்தால் அதை குறிப்பிட்டு சொல்லலாம், படம் முழுவதும் மாஸ் அனுபவமாகவே இருந்தது என படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு பக்கம் பிரியா வாரியர் நடனம் ஆடிய ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் டிரெண்டாகியுள்ள நிலையில் இன்னொரு பக்கம், அஜித்தின் மாஸ் நடிப்பி, திரிஷாவின் லவ் போrஷன், அர்ஜுன் தாஸ் வில்லன் நடிப்பு, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை எனப் பலவகை பாசிட்டிவ் விமர்சனங்களும் இப்படத்திற்கு சாதகமாக கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன், அஜித் உடன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ’வாலி’, ‘அவள் வருவாளா’ ‘உன்னை கொடு, என்னை தருவேன்’ உள்ளிட்ட படங்களில் முன்னதாக அஜித்துடன் இணைந்திருந்த சிம்ரன், இப்போது 'குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

"சிறப்பு தோற்றம் கேரக்டர் என்றுதான் படத்திற்குள் வந்தேன். ஆனால், இப்படத்தின் மூலம் அஜித் சார் அவர்களுடைய அன்பை பெற்றேன். அவருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’யில் நடித்தது ஒரு பிளாஸ்ட்! இப்படியான ஒரு பயணத்தை வழங்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment