ஆர்யா படத்தில் இணைந்த சிம்ரன்: சென்னையில் இன்று பூஜை!

  • IndiaGlitz, [Monday,October 25 2021]

ஆர்யா நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படம் வெற்றியடைய நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ’டெடி’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூல் ரீதியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யா மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். அந்த வகையில் சற்று முன்னர் ஆர்யா - சக்தி சௌந்தர்ராஜன் இணையும் திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இதுகுறித்து ஆர்யா தனது டுவிட்டரில் கூறியபோது ’மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் அவர்களுடன் இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து நடிகை சிம்ரன் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ’ஆர்யா 33’ படத்தில் தான் இணைந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.