close
Choose your channels

சிம்ரனுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

Saturday, December 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று வெளியான தனுஷின் 'தங்கமகன்' திரைப்படம் இவ்வருடத்தில் வெளியாகும் 200வது படம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது வரும் 2016ஆம் ஆண்டில் வெளியாகும் முதல்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரியில் பல படங்கள் வெளியாக உள்ளபோதிலும், ஜனவரி முதல் தேதியே சிம்ரன் நடித்த 'கரையோரம்' திரைப்படம் வெளிவருகிறது. இந்த படம்தான் அடுத்த வருடத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறவுள்ளது.


இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் உறுதி என கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் நிகிஷா பட்டேல், இனியா, சுனில் ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சிங்கம்புலி உள்பட பலர் நடிக்கின்றனர். திகில் படமான இந்த படத்தை ஜெகதீஷ்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.