அந்த நடிகை என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார்.. 'டப்பா ரோல்' சர்ச்சை குறித்து சிம்ரன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த மாதம் நடிகை சிம்ரன், திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, ஒரு நடிகையின் பெயரை குறிப்பிடாமல், "டப்பா ரோல்" என்ற கேரக்டரில் தான் நடித்ததாக விமர்சனம் செய்ததை, மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த நிலையில், சமீபத்தில் சிம்ரன் அளித்த பேட்டியில், அந்த நடிகை தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியதாவது:
பல வெப்சைட் சீரீஸ்கள் வருகின்றன. அதில் "டப்பா கார்டெல்’ நல்ல வெப் சீரீஸ்தான் என்று நினைக்கிறேன். இன்னும் நான் அந்த சீரியஸை பார்க்கவில்லை. ஆனால் அன்றைக்கு நான் அந்த நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய போது, அவர் கூறிய வார்த்தைகள் என்னை காயப்படுத்தின. ஆனால், அவர் திட்டமிட்டு பேசவில்லை என்பது எனக்கு புரிந்தது.
மற்றவர்களை பற்றி நான் வெளியில் பேசமாட்டேன்; என் நண்பர்களுக்குள் மட்டுமே பகிர்வேன். ஆனால், அவர் அனுப்பிய மெசேஜில் இருந்த வார்த்தைகள் என்னை காயப்படுத்தியதால் தான், அந்த மேடையை பயன்படுத்திக் கொண்டு, நான் என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தேன்.
அதன் பிறகு, அந்த நடிகை தனது கருத்தை சொல்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், அதே நேரத்தில், அவர் அதை வெளிப்படுத்த தேர்வு செய்த வார்த்தைகள்தான் தவறு என்று நான் நினைத்தேன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சம்பந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பினார். அதில், "உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை" என்றும் தெரிவித்திருந்தார் என்று சிம்ரன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com