close
Choose your channels

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அஜித் பட பாடல் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்!

Monday, July 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என நடிகை சிம்ரன் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலா வருகிறது.

அஜித் இரண்டு வேடங்களிலும் சிம்ரன் நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய திரைப்படம் ’வாலி’. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வாலி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான ‘நிலவை கொண்டு வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த பாடலின் காமெடி வீடியோ ஒன்று இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடும் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு காய்ச்சல் என்றும் அதனால் தான் அவர் மெதுவாக பாடுவதாகவும் இந்த காமெடி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

பார்த்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள சிம்ரன், ‘திங்கட்கிழமை காலை எழுந்தவுடன் இந்த பாடலை கேட்டு சுறுசுறுப்பானேன்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ’ரூம் போட்டு யோசிப்பாங்களோ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.