விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

நவீன ராமாயண கதையான அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

More News

நடிகர் சங்க தேர்தல் நாளில் 'அல்வா' கொடுக்க காத்திருக்கும் எஸ்.வி.சேகர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்த தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத பிரபல நடிகரின் மகள்!

'கனா' நாயகன் தர்ஷன் நடித்துள்ள அடுத்த படமான 'தும்பா' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்: 'தளபதி 63' அப்டேட் குறித்து அர்ச்சனா கல்பாதி

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள்

அரவிந்தசாமியின் பிறந்த நாளில் அடுத்த பட டைட்டில்!

நடிகர் அரவிந்தசாமி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அவர் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது

தளபதி 63 டைட்டில்: இதுவரை உலகமே கேள்விப்படாத ஒற்றை வார்த்தையாம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.