close
Choose your channels

சிந்துபாத் படத்தின் சிறப்பான ரன்னிங் டைம்!

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நாளை வெற்றிகரமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சென்சாரில் 'யூ/ஏ சான்றிதழ் பெற்ற சிந்துபாத் திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 131 நிமிடங்கள் ஆகும். அதாவது இரண்டு மணி நேரம் 11 நிமிடங்கள் மட்டுமே. இதில் முதல் பாதி 72 நிமிடங்களும், இரண்டாம் பாதி 59 நிமிடங்களும் ஓடும் வகையில் உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் சேஸிங் காட்சி என விஜய்சேதுபதி கூறியிருப்பது தெரிந்ததே. ஒரு ஆக்சன் படத்திற்கான சரியான சிறப்பான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'பண்ணையாரும் பத்மினியும், 'சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.