close
Choose your channels

சிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி!

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் கடைசி நேர பஞ்சாயத்து காரணமாக குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் தற்போது இந்த படத்திற்கான பிரச்சனைகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியானது

இந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி ஏற்கனவே ஹவுஸ் ஓனர் உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் 'ஹவுஸ் ஓனர்' இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் சின்ன படங்கள் ரிலீஸ் ஆக உதவி செய்ய வேண்டும் என்றும் சிந்துபாத்' படகுழுவினர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணனின் கோரிக்கையை சிந்துபாத் படக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை. சற்றுமுன் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய்சேதுபதியும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். 

Get Breaking News Alerts From IndiaGlitz