'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 20 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் கொடுத்த தேதியை அறிவித்துள்ளார்

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த பாடல் நாட்டிலுள்ள ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கும் பாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே வைரலாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
 

More News

நீ எதிரியா? உதிரியா? பதறியே வா: 'தீ முகம் தான்' பாடல் வரிகள்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் 'தீ முகம் தான்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த அட்டகாசமான ஆவேசமான பாடல் வரிகளை தற்போது பார்ப்போம்

கமல் கூறிய வாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு பரபரப்பாக இருந்தது என்றால் அதற்கு கவினின் முக்கோண காதல் கதை தான் காரணம். சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரையும்

இதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்

சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.

நடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது சக நடிகர்கள் அந்த படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிப்பது வழக்கமான ஒன்று

மீராவுக்கு ஒரு குறும்படம்: முகத்திரை கிழியுமா?

இந்த வாரம் நிகழ்ந்த டிக்டாக் டாஸ்க்கில் ஒரு சின்ன பிரச்சனையை மீரா பூதாகரமாக கிளப்ப, அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யும்