தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியின் 31வது ஜமீனாக இருந்தவர் இவர் என்பதும், 1200 வருட பழமைவாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் முடி சூடிய ராஜாவாக திகழ்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பட்டம் கட்டபட்ட கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்தப்பதி என்பதால் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன். இந்த 72 பாளையங்களில் 24 பாளையங்களுக்கு சிங்கப்பட்டி ஜமீந்தார் தான் தலைமை தாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த 1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதும் இருப்பினும் இந்த சட்டம் வருவதற்கு முன்பே பட்டம் சூட்டிய ராஜாக்களில் ஒருவராக இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

1936ம் ஆண்டில் தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்கு பின்னர் தனது 6வது வயதில் முடிசூட்டப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி தான் ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர், இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிக் கொண்ட மன்னர்களில் கடைசி மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நடிகர் சூர்யாவுக்கு காயமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு

16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 765 எனவும்,

சகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ

மே 24ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் ஒருவருக்கொருவர்

நல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களளின் புரமோஷன்கள் எதுவும் வெளிவரவில்லை

தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் என 700க்கும் மேற்பட்டவர்களும்,