ஆண்களே நாசமா போங்க.. நடிகையின் அந்தரங்க வீடியோ லீக் குறித்து பாடகி சின்மயி ஆவேசம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல தொலைக்காட்சி நடிகையின் தனிப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி சின்மயி இதுகுறித்து மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
"இந்த வீடியோவை உருவாக்கியது, பரப்பியது, பகிர்ந்தது எல்லோரும் ஆண்கள்தான். ஆனால், அதே ஆண்கள்தான் லஞ்சம் கொடுப்பது தவறு, அதை ஏற்பது குற்றம் என பாசாங்கு பேசிக்கொள்கிறார்கள். உண்மையில், பணமில்லாமல் எதுவும் நடக்காது என்பதையும், சில பெண்கள் சமரசம் செய்ய மறுப்பதால் வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது என்பதையும் அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு பெண் தனக்கான இடத்தில் நிமிர்ந்து நிற்க முயன்றால், சமூகமே அவளை குற்றவாளியாக காட்டிவிடுகிறது. ஆனால் பாலியல் வசதிக்காக ஒரு பெண்ணை துன்புறுத்தியவர்களை எவரும் கண்டிக்க மறுக்கின்றனர்.
இவ்வாறான நிலைமை தொடர்ந்து நீடிக்கிறது. இதை செய்பவர்களும் ஆதரிப்பவர்களும் மக்களால் போற்றப்படுகிறார்கள். ஆனால், ஒரு பெண் என்றால், அவள் தொடர்ந்து தன் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகிறது. சில ஆண்களுக்கு எதை வேண்டுமானாலும் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், உண்மையான திறமை இல்லாத பிறகு, அவர்கள் சூழ்நிலைகளில் சிறிதளவு முன்னேறினாலும் தங்கள் வஞ்சகமான செயல்களிலேயே தங்களின் முழுப் பலத்தையும் செலுத்துகிறார்கள். உண்மையில், இவர்களுக்கு வேறு வழியில்லை என்றால் நேரடியாக விபச்சாரத்திலேயே பணம் சம்பாதிக்கலாம். ஏனென்றால், இந்த நாட்டில் அதற்கே தனியாக சந்தை இருக்கிறது!"
"இங்கு பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு, வணிகப் பொருளாக மாற்றப்படுகிறார்கள். அவர்கள் குரலின்றி மறைக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். மரங்களில் தொங்கவிடப்படுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரமான சம்பவங்களை நினைவில் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனப்போக்குடைய ஆட்கள் ஊடகம், திரைப்படம், கலை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்பது கேவலம்! கலையின் தூய்மை காக்கப்பட வேண்டுமென்றால், இவர்கள் அங்கிருந்து விலக வேண்டும்."
"பெண்களை தவறாக நடத்துபவர்களும், அவர்களை அடிமையாக்க நினைப்பவர்களும் தங்கள் குடும்பத்தில் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனைவியிடம், தாயிடம், சகோதரியிடம், மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
"சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நடிகையின் வீடியோவை வெளியிட்டவர்கள் யார்? அதை பரப்பியவர்கள் யார்? ஒருவர் படம் எடுத்தாலும், அதை பகிர பலர் தயார் என்கிறார்கள். நாம் முன்னேறிய நாடாக இருந்தாலும், இத்தகைய விஷயங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது. இப்படிப்பட்ட தீய சக்திகள் முழுவதுமாக அழிந்து நாசமா போல வேண்டும். அவர்களை உருவாக்கிய பின்னணியும் உடனே அழிய வேண்டும்!"
சின்மயியின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A young TV actress’ videos / photos were ‘leaked’ - mostly shared by the men in question. Men on Twitter shared asking other men to DM for the link.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 31, 2025
Of course men in Tamilnadu are saying lanjam vaanguvadhu thappu koduppadhu thappu - (It is a crime to ask and give bribes). Nobody…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments